கொவிட்-19 தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளும் நோக்கில் எல்லையைக் கடக்கும கனேடியர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் பிரிவு அறிவித்துள்ளது.
கனடாவிலிருந்து அத்தியாவசிய தேவைகளுக்காக அமெரிக்க எல்லையைக் கடப்பவர்களுக்கு அனுமதி வழங்கப்படுமு; என தெரிவித்துள்ளது.
எனினும், தடுப்பூசி ஏற்றிக் கொள்வதனையே பிரதான நோக்காகக் கொண்டு எல்லையைக் கடப்பவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுவர் என அமெரிக்க அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறெனினும் ஏதேனும் அத்தியாவசிய காரணிகளுக்காக அமெரிக்காவிற்குள் பிரவேசித்து தற்செயலான அடிப்படையில் கொவிட் தடுப்பூசி ஏற்றிக் கொண்டால்
அதனை தடுக்கப் போவதில்லை என எல்லைப் பாதுகாப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கொவிட் நோய்த் தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பகுதி மூடப்பட்டுள்ளதுடன் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.