றொரன்டோவில் வீடற்றவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது.
வீடற்றவர்கள் தற்காலிகமாக தங்கியிருந்த பகுதியிலிருந்து அவர்களை வெளியேற்றுவதற்கு நகர அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சியின் போது இந்த முரண்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது.
அதிகாரிகளுக்கும் வீடற்றவர்களுக்கும் இடையிலான முரண்பாட்டு நிலைமை பதற்றமாக உருவாகியதாகவும், சிலரை பொலிஸார் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்படுகி;ன்றது.
எவ்வாறெனினும், முரண்பாட்டு நிலைமைகளைத் தொடர்ந்து குறித்த பகுதியிலிருந்து வீடற்றவர்களை வெளியேற்றும் நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
றொரன்டோவின் லம்போர்ட் மைதானத்திற்கு அருகாமையில் தற்காலிக கூடாரங்களில் சில வீடற்றவர்கள் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.