Home இலங்கை கடற்றொழிலில் ஈடுபடுபோருக்கு எச்சரிக்கை

கடற்றொழிலில் ஈடுபடுபோருக்கு எச்சரிக்கை

by Jey

இலங்கையில் கடற்றொழிலில் ஈடுபடுவோருக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடக்கு அந்தமான் , வட கிழக்கு வங்காள விரிகுடா கடலில் தாழமுக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாளை மறுநாள் அல்லது அதற்கு முன்னர் இத்தாழமுக்க நிலை ஏற்படலாமென திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த தாழமுக்க நிலையினால் 72 மணித்தியாலங்களுக்குள் அது சூறாவளியாக மாற இடமுண்டு என்றும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

நாளை முதல் மறு அறிவித்தல் வரை வட கிழக்கு வங்காள விரிகுடாவை அண்டிய கடல் பகுதியில் கடல் பயணங்களை மேற்கொள்வதிலிருந்து கடற்றொழில் ஈடுபடுவதிலிருந்தும் தவிர்ந்து கொள்ளுமாறு திணைக்களம் மீனவர்களையும் கடற் பயணங்களை மேற்கொள்வோரையும் கேட்டுள்ளது. அவ்வாறு கடற் பயணங்களை மேற்கொள்வோர் மற்றும் மீனவர்கள் கரைக்கு திரும்புமாறு அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். இதேநேரம் மேற்கு சப்ரகமுவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி , மாத்தறை மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் கூடுதலான மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

related posts