Home இலங்கை துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலம் 89 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்

துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலம் 89 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்

by Jey

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்போது, சட்டமூலத்துக்கு ஆதரவாக 148 வாக்குகளும், எதிராக 59 வாக்குகளும் கிடைத்தன.

இதனையடுத்து, குறித்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அறிவித்தார்.

நேற்றைய தினமும் இன்றைய தினமும் கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம் நடாத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சிகளின் கடுமையான விரோதத்திற்கு மத்தியில் இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

related posts