கொழும்பு துறைமுக நகரில் அமைந்துள்ள இடமொன்றின் பெயர்ப் பலகையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை குறித்து சீனா பதிலளிப்பது ஏன் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலம் குறித்த நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் பெயர்ப் பலகையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் டுவிட்டரில் தனது எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.
இந்த பதிவிற்கு இலங்கை அரசாங்கத் தரப்பில் பதில் எதுவும் கூறப்படாத நிலையில் இலங்கைக்கான சீனத் தூதுரகமே தமிழ் மொழி பெயர்ப்பலகையில் இணைக்கப்படும் என சீனத் தூதரகம் பதலளித்திருந்தது.
இவ்வாறு சீனத் தூதரகம் எவ்வாறு இலங்கையின் உள்விவகாரங்களில் பதிலளிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சட்ட மூலம் தொடர்பில் உச்ச நீதிமன்றிடம் சட்ட விளக்கம் கோரப்பட்டிருக்காவிட்டால் இதில் உள்ள ஆபத்தான அனைத்து சரத்துக்களும் உள்ளடக்கப்பட்டே சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நகரிற்கு செல்வதற்கு வீசா தேவைப்படும் வகையிலும் அங்கிருந்து கொள்வனவு செய்பய்படும் பொருட்களுக்கு சுங்கத் தீர்வை செலுத்த வேண்டிய வகையிலும், குற்றவியல் சட்டத்திற்கு ஏற்ப ஆணைக்குழவினால் தண்டனை விதிக்கப்படும் வகையிலும் சரத்துகள் ஆணைக்குழு சட்ட மூலத்தில் காணப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அரசாங்கம் ஈழம் பற்றி பேசும் அதனை எதிர்த்தாலும் இன்று சீனாவிடம் சீலத்தை வழங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிலம் நீர் ஆகிய அனைத்து வகையிலான உரிமைகளையும் சீனாவிடம் இந்த அரசாங்கம் விட்டுக் கொடுத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.