ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா மீண்டும் தெரிவாகியுள்ளார். அவர் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கென வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் அதனை மீளப்பெற்றதை அடுத்து ஷம்மி சில்வா ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்தல் இன்று இடம்பெற்றது. எதிர்வரும் இரு வருடங்களுக்கென அதிகாரிகளை தெரிவுசெய்யும் நோக்கில் தேர்தல் இடம்பெறுகிறது. சூம் தொழிநுட்பத்தினூடாக காலை 10 மணிக்கு தேர்தல் ஆரம்பமானது.
இலங்கை கிரிக்கெட் தேர்தல் இணையத்தளத்தினூடாக நடத்தப்படும் முதலாவது வரலாற்று சம்பவமாகவும் இது பதிவாகியுள்ளது.
தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கடந்த பெப்ரவரி மாதம் 24ம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதற்கமைய செயலாளர் பதவிக்கு மொஹான் டி சில்வா வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், உபதலைவர் பதவிக்கு ஜயந்த தர்மதாச வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார்.