ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற இரண்டு குண்டுத் தாக்குதல்களில் 13 பேர் உயிரிழந்தாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் ஹெல்மந்த் மாகாணத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் காரில் நேற்று பயணித்தனர். மாகாண தலைநகர் லஷ்கர் காவில் கார் சென்றபோது சாலையில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து சிதறியது. இதில் அந்த கார் கவிழ்ந்தது.
இந்த குண்டுவெடிப்பில் ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்; மூன்று குழந்தைகள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல் மத்திய கோர் மாகாணத்தில் இருசக்கர வாகனத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் நேற்று பயணித்தனர். அப்போது அங்கு நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் அவர்கள் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.