இஸ்ரேலும் பலஸ்தீனும் யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ள முன்வந்துள்ளன.
இதன்மூலம் 11 நாட்களாக இடம்பெற்ற மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ள இஸ்ரேலும் ஹமாஸ் இயக்கமும் இணக்கம் வெளியிட்டுள்ளன.
இரு தரப்பினருக்குமிடையில் மத்தியஸ்தம் வகிக்க எகிப்து முன்வந்துள்ளது. எகிப்தின் விசேட பிரதிநிதிகள் இஸ்ரேல் மற்றும் காசா பகுதிகளுக்கு விஜயம் செய்துள்ளனர்.
அமெரிக்கா சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான ஒத்துழைப்பாளராக செயற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 2 மணி முதல் யுத்த நிறுத்தம் அமுலுக்கு வந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
புரிந்துணர்வுடன் கூடிய நிபந்தனையற்ற யுத்த நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இதேவேளை கடந்த 11 நாட்களாக இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 232 பலஸ்தீனர்களும், 12 இஸ்ரேலியர்களும் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.