பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் மருந்தகங்கள் திறந்திருக்கும் எனவும் அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் இடம்பெறுமெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் சுற்றுலாக்கள், யாத்திரைகள், உறவினர்கள் வீடுகளுக்கு செல்தல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்திற்கமைவாக நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.