கொவிட் நோய்த் தொற்றுக்கான தடுப்பூசிகளில் ஒன்றான அஸ்ட்ரா சென்கா தடுப்பூசியினால் ஆபத்து ஏற்படப் போவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களுக்கு இரத்த உறைதல் நோய் ஏற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
எனினும், இந்த தடுப்பூசியின் இரண்டாம் மருந்தளவை போட்டுக் கொண்டவர்களுக்கு இரத்த உறைவு நோய் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் மிக அரிது என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தடுப்பூசியினால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் தொடர்ச்சியாக ஆய்வுகளை நடாத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.