இந்திய அணிக்காக 40 டெஸ்டுகள், 304 ஒருநாள், 8 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் யுவ்ராஜ் சிங். 2017-க்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் அவர் விளையாடவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் கடைசியாக 2012-ல் விளையாடினார்.
இந்நிலையில் ஓர் இணையத்தளத்தில், எந்த வீரர் அதிக டெஸ்ட் ஆட்டங்களை விளையாடியிருக்க வேண்டும் என்கிற கேள்வி கேட்கப்பட்டது. அதனுடன் யுவ்ராஜ் சிங்கின் புகைப்படமும் இணைக்கப்பட்டிருந்தது.
இதற்குப் பதில் அளித்த யுவ்ராஜ் சிங் கூறியதாவது:
அடுத்த வாழ்க்கையில் அதிக டெஸ்டுகளில் விளையாட விரும்புகிறேன், 7 வருடங்களுக்கு 12-வது வீரராக இல்லாத பட்சத்தில் என்று கூறியுள்ளார்.
40 டெஸ்டுகளில் விளையாடியுள்ள யுவ்ராஜ் சிங், 3 சதங்களுடன் 1900 ரன்கள் எடுத்துள்ளார்.