கனடாவில் 50 வீதமானவர்கள் முதல் தடுப்பூசியேனும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
கனடாவின் மொத்த சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியேனும் ஏற்றப்பட்டுள்ளது.
இதுவரையில் கனடாவில் 20,328,984 டோஸ் தடுப்பூசிள் ஏற்றப்பட்டுள்ளன.
இதன்படி, குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியேனும் ஏற்றப்பட்டவர்களின் வீதம் 50.01 ஆக பதிவாகியுள்ளது.
கனடாவின் மொத்த சனத்தொகை 37.7 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.