கொவிட் நோய்த் தொற்றுக்கான இரண்டாவது டோஸ் தடுப்பூசி பெற்றுக் கொள்வதற்காக காத்திருப்போர் பொறுமை காக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதல் டோஸ் தடுப்பூசி பெற்றுக் கொண்ட சிலர் இரண்டாவது டோஸ் பெற்றுக் கொள்ளும் முயற்சிகளின் போது அசௌகரியங்களுக்கு உள்ளாக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாவது தடுப்பூசி பெற்றுக் கொள்வது தொடர்பிலான தகுதியை பூர்த்தி செய்து கொள்ளாதவர்களும் தடுப்பூசி பெற்றுக் கொள்ள முயற்சித்து வருவதாக தடுப்பூசி விநியோகம் செய்யும் சிகிச்சை நிலையங்கள் தெரிவித்துள்ளன.