றொரன்டோவில் பொலிஸார் நடாத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
றொரன்டோவின் யோங் வீதிக்கு அருகாமையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸாருக்கும் நபர் ஒருவருக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டதாகவும் இதன் போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு குறித்த நபர் இலக்காகியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.