நாட்டில் ஒரே நாளில் கரோனா தொற்றால் 4,454 போ் உயிரிழந்துள்ளதாகவும், இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,03,720 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி 27,20,716 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கரோனா தொற்றிலிருந்து இன்று 3,02,544 குணமடைந்த நிலையில் இதுவரை 2,37,28,011 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்திய மருத்துவ கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தரவுகளின்படி, மே 23 ஆம் தேதி வரை 33,05,36,064 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. நேற்று ஒரேநாளில் 19,28,127 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதேசமயம் இதுவரை 19,60,51,962 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.