கனடாவில் கொவிட்-19 நோய்த் தொற்றின் மற்றுமொரு அலை ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டாலும் கொவிட் பெருந்தொற்று தலைதூக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஸ்கட்ச்வானின் தொற்று நோய் நிபுணர் நாசீம் முஹாஜரீன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே காணப்படும் அல்லது புதிய வகை கொவிட் திரிபுகள் தலைதூக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீஷெல்ஸில் 60 வீதமான மக்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்ட போதிலும் அங்கு கொவிட் தொற்று மீளவும் தலைதூக்கியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கனடாவில் தற்பொழுது பிரித்தானிய திரிபுடைய வைரஸ் தொற்று அதிகம் பரவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.