கனேடிய படைத் தரப்பினைச் சேர்ந்த சுமார் 85 வீதத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனேடிய தேசிய பாதுகாப்புத் திணைக்களம் இது பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளது.
கனேடிய பாதுகாப்புப் படைகளில் கடமையாற்றி வரும் படையினரில் 85 வீதமானவர்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
பெரும் எண்ணிக்கையிலான படைவீரர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருவாகவும், அமெரிக்காவில் இந்த நிலைமை மாறுபட்டது எனவும் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விடுமுறையில் அல்லது தூரப் பிரதேசங்களில் நிலைகொண்டுள்ள படையினரே பெருமளவில் இன்னமும் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளது.