சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று வெளிப்படுத்துவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் வூஹானிலுள்ள ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றிய மூவர் தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குறித்த ஆராய்ச்சியாளர்கள் மூவரும் தொற்றுக்குள்ளானதாக அமெரிக்க புலணாய்வுப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் ஆரம்பம் குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் சீனாவின் வூஹான் நகரில் சில நாட்கள் ஆய்வுகளை முன்னெடுத்த நிலையில் இந்த விடயம் குறித்து சில ஆவணங்கள் அமெரிக்க புலணாய்வுப்பிரிவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அமெரிக்க புலணாய்வுப்பிரிவின் தகவல்களுக்கமைய கொரோனா வைரஸ் தொற்றின் தோற்றம் குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்தின் விசாரணை
தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.