முதல் ஒருநாள் ஆட்டத்தில் 33 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது வங்கதேச அணி. 2-ம் ஒருநாள் ஆட்டம் டாக்காவில் இன்று நடைபெறுகிறது.
டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 15.4 ஓவர்களில் 74 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது வங்கதேச அணி. பிறகு ஜோடி சேர்ந்த முஷ்ஃபிகுர் ரஹிமும் மஹ்முதுல்லாவும் நல்ல கூட்டணி அமைத்தார்கள். மஹ்முதுல்லா 41 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முதல் ஒருநாள் ஆட்டத்தில் 84 ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர் முஷ்ஃபிகுர் ரஹிம் இன்றும் சிறப்பாக விளையாடி சதமடித்தார். 125 ரன்களுடன் கடைசியாக ஆட்டமிழந்தார். இது அவருடைய 8-வது ஒருநாள் சதமாகும்.
வங்கதேச அணி 48.1 ஓவர்களில் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணித் தரப்பில் துஷ்மந்தா, சண்டகன் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.