Home சினிமா காமெடி நடிகர்கள் பெயரில் போலி டுவிட்டர் கணக்குகள்

காமெடி நடிகர்கள் பெயரில் போலி டுவிட்டர் கணக்குகள்

by admin
சமூக வலைத்தளங்கள் என்பது பிரபலங்கள் அதிகம் பயன்படுத்தும் தளங்களாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக டுவிட்டர் தளத்தைத்தான் சினிமா பிரபலங்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். அதே சமயம் சமூக வலைத்தளங்களில் கணக்குகளே இல்லாத சில சினிமா பிரபலங்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். விஜய், அஜித், விக்ரம், நயன்தாரா உள்ளிட்ட சிலர் இன்னமும் எந்த கணக்கையும் ஆரம்பிக்கவில்லை. ஆனால், அவர்கள் இல்லாத தளங்களில் அவர்களைப் பற்றிப் பேசி சண்டையிட்டுக் கொள்பவர்களும் அதிகம் இருக்கிறார்கள்.
டுவிட்டர் உள்ளிட்ட தளங்களில் போலி கணக்குகளும் சினிமா பிரபலங்களின் பெயர்களில் இயங்கி வருகின்றன. அது போன்ற போலி கணக்குகளை நீக்கும் வேலைகளை அந்த நிறுவனம் இதுவரை செய்யவில்லை.
சமீப காலமாக நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமணி, ஜனகராஜ் ஆகியோரது பெயரில் போலி கணக்குகள் செயல்பட ஆரம்பித்துள்ளன.
யோகி பாபு பெயரிலும் ஒரு போலி கணக்கு இருக்கிறது. அது பற்றி அவர் தனது உண்மையான கணக்கில் சொன்ன பின்னும் போலி கணக்கை சிலர் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். சொல்லப் போனால் உண்மை கணக்கை விட போலி கணக்கில்தான் அவருக்கு பாலோயர்கள் அதிகம்.
சமூக வலைத்தள நிறுவனங்கள் இது போன்ற போலி கணக்குகளை அடையாளம் கண்டு அவற்றை நீக்க வேண்டும் என்பது பலரது கோரிக்கையாக உள்ளது.

related posts