மாகாணத்தின் பல்கலைக்கழகங்கள் சீனா மற்றும் சீன கம்யூனிஸ்ட கட்சியுடன் பேணி வரும் தொடர்புகளை இடைநிறுத்திக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அல்பர்ட்டாவின் கல்வி அமைச்சர் டிமிட்ரியோஸ் நிகலோயிஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சீனா மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் அல்பர்ட்டா பல்கலைக்கழகங்கள் பேணி வரும் தொடர்புகள் குறித்த விபரங்களை வெளியிடுமாறு மேலும் கோரப்பட்டுள்ளது.
கனடாவின் புலமைச் சொத்துக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் இதனால் இந்த விடயம் அறிவிக்கப்படுவதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.