Home கனடா நோவா ஸ்கோட்டியாவில் கொவிட் சட்டங்களை மீறியோருக்கு அபராதம்

நோவா ஸ்கோட்டியாவில் கொவிட் சட்டங்களை மீறியோருக்கு அபராதம்

by Jey

நோவா ஸ்கோட்டியாவில் கொவிட் சட்டங்களை மீறிச் செயற்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நோவா ஸ்கோட்டியாவின் கொலே ஹார்பர் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் விருந்துபசாரம் நடாத்தியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொவிட் சட்டங்களை மீறியவர்களுக்கு எதிராக 21978 டொலர்கள் இவ்வாறு அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
குறி;த்த வீட்டில் 30 பேர் வரையில் குழுமியிருந்தனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸார் வீட்டை சுற்றி வளைத்ததனை அறிந்து கொண்டவர்கள் அமைதியாக இருந்ததாகவும் பின்னர் விருந்தில் பங்கேற்றவர்களுக்கு தனித் தனியாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

related posts