வான்கூவரில் தனது எஜமானை கொடூரமாக தாக்கிய நாய் ஒன்று தொடர்பில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
வான்கூவரின் அர்புடுஸ் என்னும் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் வளர்க்கப்பட்ட நாய், தனது எஜமானை கடுமையாக தாக்கி படுகாயமடையச் செய்துள்ளது.
நாயிடமிருந்து தப்பித்துக் கொள்ள வீட்டு உரிமையாளர் முயற்சித்த போதிலும் நாய் தொடர்ச்சியாக தாக்கி அவரைக் காயப்படுத்தியுள்ளது.
நாயின் இந்த தாக்குதல் குறித்து அயலவர்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் வந்து குறித்த நபரை நாயிடமிருந்து மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.