Home விளையாட்டு இந்தியா-இங்கிலாந்து மகளிர் டி20 3-வது ஆட்டத்தின் தேதி மாற்றம்!

இந்தியா-இங்கிலாந்து மகளிர் டி20 3-வது ஆட்டத்தின் தேதி மாற்றம்!

by admin
இந்திய மகளிர் அணி ஒரு டெஸ்ட் ஆட்டம், 3 ஒருநாள் ஆட்டங்கள் மற்றும் 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இதில் 3-வது டி20 ஆட்டம் ஒளிபரப்பு காரணங்களுக்காக ஜூலை 15-ம் தேதிக்குப் பதில் ஜூலை 14-ம் தேதிக்கு மாற்றப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் ஆட்டம் ஜூன் 16-ம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் தொடர் ஜூன் 27-ம் தேதி தொடங்குகிறது. டி20 தொடர் ஜூலை 9-ம் தேதி தொடங்குகிறது.

related posts