ஒன்றாரியோவில் கொவிட் தொற்று உறுதியானவர்களின் நாளாந்த எண்ணிக்கை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு தினங்களாக மாகாணத்தில் கொவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை 1100 ஐ விடவும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் மொத்த நோய்த் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை 1039 ஆகவும் இன்றைய தினம் மொத்த தொற்று உறுதியாளர் எண்ணிக்கை 1095 ஆகவும் பதிவாகியுள்ளது.
கடந்த மார்ச் மாத ஆரம்பத்தின் பின்னர் மாகாணத்தில் குறைந்தளவான நோய்த் தொற்று உறுதியாளர்கள் பதிவான நாட்களாக இந்த நாட்கள் பதிவாகியுள்ளது.
மாகாணத்தில் இதுவரையில் கொவிட் காரணமாக 8678 பேர் உயிரிழந்துள்ளனர்.