பாடசாலைகள் மீள திறக்கப்பட வேண்டுமென ஒன்றாரியோவின் பிரதம மருத்துவர் டொக்டர் டேவிட் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
கொவிட் பெருந்தொற்று காரணமாக மாகாணம் முழுவதிலும் வீட்டிலேயே இருங்கள் உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மாகாணம் வழமைக்குத் திரும்புவதற்கு முன்னதாகவே பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் என டொக்டர் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
ஜூன் மாத நடப் பகுதியளவில் மாகாணத்தின் சுகாதார கெடுபிடிகளை தளர்த்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.