பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் நிலநடுக்கங்கள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு என அண்மையில் நடாத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
வடக்கு பிரிட்டிஷ் கொலம்பியாவில் அடிக்கடி இவ்வாறான நிலநடுக்கங்கள் பதிவாகக்கூடிய அபாயம் நிலவி வருவதாகக் குறிப்பிடப்படுகின்றது.
பிரிட்டிஷ் கொலம்பிய எண்ணெய் மற்றும் எரிவாயு ஆணைக்குழுவின் சிரேஸ்ட விஞ்ஞானியும் சுயாதீன ஆய்வாளருமான எலன் சாப்மான் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.
எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வுகளினால் இவ்வாறு நிலநடுக்கம் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் உருவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பிரி;ட்டிஷ் கொலம்பியாவில் ஏற்படக்கூடிய நிலநடுக்க அபாயங்களை தடுப்பதற்கு தற்போதைய அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.