மானிடோபா மாகாணத்தின் முதல்வர் பிரயன் பாலிஸ்டர் தகாத வார்த்தை பிரயோகத்திற்காக மன்னிப்பு கோரியுள்ளார்.
சட்டமன்ற குழு நிலைக் கூட்டத்தின் போது எதிர்க்கட்சியினர் நோக்கி பயன்படுத்திய வார்த்தைகள் தொடர்பில் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.
மாகாண வரவு செலவுத் திட்டம் தொடர்பில் இந்தக் கூட்டம் நடாத்தப்பட்டிருந்தது.
என்.டி.பி கட்சியின் தலைவர் வஹாப் கினிவ் கொவிட் தொடர்பில் கேள்வி எழுப்பிய போது, முதல்வர் பாலிஸ்டர் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தார்.
தாம் பயன்படுத்திய வார்த்தைப் பிரயோகம் உசிதமானதல்ல எனவும் அதனை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.