மாநில தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த முகமது நசிமுதீன், கூட்டுறவு மற்றும் உணவுத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிரியர்கள் தேர்வு வாரியத்தின் தலைவராக இருந்த நிர்மல் ராஜ் ஐஏஎஸ், புவியியல் மற்றும் சுரங்கம் – நிர்வாக இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோன்று மக்கள் மறுவாழ்வு மையத்தின் சிறப்புச் செயலராக இருந்த வெங்கடேஷ் ஐஏஎஸ், கருவூல கணக்குகள் – ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், டாஸ்மாக் நிர்வாக இயக்குநராக எல். சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் 21 ஐஏஎஸ் அதிகாரிகளும் நேற்று 6 ஐஏஎஸ் அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர், பல அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகளும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.