சர்வதேச ரீதியில் கொவிட் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 இலட்சத்தைக்கடந்துள்ளது. உத்தியோகபூர்வ முடிவுகளுக்கமைய 35 இலட்சத்து 12 ஆயிரத்து 509 பேர் உயிரிழந்துள்ளனர்.
16 கோடியே 90 இலட்சத்து 94 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 15 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்க முதல் இடத்திலிலுள்ளது. இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த வரிசையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய நாட்களாக இந்தியாவில் கொவிட் மரணங்கள் எண்ணிக்கை பெருவாரியாக பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.