இத்தாலியை பூர்வீகமாகக் கொண்ட கனேடியர்களிடம் பிரதமர் ஜஸ்ரின் டரூடே மன்னிப்பு கோர உள்ளார்.
இரண்டாவது உலகப் போரின் போது கனடா, இத்தாலிய கனேடியர்களை நடாத்திய விதம் குறித்து கவலை வெளியிடப்பட்டுள்ளது.
இன்றைய தினம் நாடாளுமன்றில் பிரதமர் ட்ரூடே அதிகாரபூர்வமாக இத்தாலியை பூர்வீகமாகக் கொண்ட கனேடியர்களிடம் மன்னிப்பு கோர உள்ளார்.
1940களில் இத்தாலி, கனடா மீது போர் அறிவித்திருந்தது இதன் போது இத்தாலியை பூர்வீகமாகக் கொண்ட கனேடியர்களை கனேடிய அரசாங்கம் எதிரிகளாக அடையாளப்படுத்தியிருந்தது.
இந்த வரலாற்று தவறுக்காக கனேடிய அரசாங்கம், இத்தாலிய கனேடியர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர உள்ளது.