பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் அவர்களின் உளச் சுகாதாரம் உறுதி செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் பாடசாலைகளுக்கு திரும்பும் போது அவர்களின் உளச் சுகாதாரமே முதன்மையானதாக கருதப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகள் திறக்கப்படும் போது கல்வி அடைவ மட்டங்களைப் போன்றே மாணவர்களின் சமூக மற்றும் உணர்வுசார் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கொவிட் முடக்க நிலைமைகளினால் மாணவர்கள் உளவியல் பிரச்சினைகளை எதிர்நோக்கியிருக்கக் கூடும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே கடந்த காலங்களை விடவும் இனி வரும் காலங்களில் மாணவர்கள் தொடர்பில் கூடுதல் கரிசனை காட்ட வேண்டுமென தெரிவித்துள்ளனர்.