சில ஆண்டுகளுக்கு முன் கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு கூறியிருந்தார். இது நாள் வரை அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தொடர்ந்து சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் பதிவிட்டு வருகிறார் சின்மயி. இந்நிலையில் மலையாளத்தில் ஞானபீட விருது பெற்ற கவிஞர் ஓஎன்வி குறுப்புவின் பெயரில் வழங்கப்படும் இலக்கியத்திற்கான விருது இந்தாண்டு இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு நடிகை பார்வதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டுவிட்டரில் அவர் கூறுகையில், ஓ.என்.வி. ஐயா எங்களின் பெருமை. அவரின் பங்களிப்பு ஒப்பிட முடியாதது. இப்படிப்பட்ட கவுரவமான விருதை பாலியல் புகாரில் சிக்கிய ஒருவருக்கு வழங்குவது அவமரியாதையாகும்” என தெரிவித்துள்ளார்.