ஒன்றாரியோ மாகாணத்தில் பிராந்திய அடிப்படையில் பாடசாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மாகாணத்தின் கொவிட்-19 நோய்த் தொற்று குறித்த விஞ்ஞான ஆலோசனை அமைப்பினால் இந்த விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொவிட் நோய்த் தொற்று பரவுகை காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் மெய்நிகர் தொழில்நுட்பத்தின் ஊடான கற்றல் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த நிலையில் மாணவர்கள் வகுப்பறைகளுக்குச் சென்று கற்றல் நடவடிக்கைகளை தொடர்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் நீண்ட நாட்கள் வீட்டிலேயே முடங்கியிருப்பது அவளர்களின் உளச்சுகாதாரத்திற்கு கேடானது என விஞ்ஞான ஆலோசனை குழு சுட்டிக்காட்டியுள்ளது.