Home கனடா அஸ்ட்ரா சென்கா தடுப்பூசிகளின் காலாவதி காலம் நீடிப்பு

அஸ்ட்ரா சென்கா தடுப்பூசிகளின் காலாவதி காலம் நீடிப்பு

by Jey

அஸ்ட்ரா சென்கா தடுப்பூசிகளின் காலாவதி காலம் நீடிக்கப்படுவதாக கனேடிய சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

சுமார் 45000 தடுப்பூசிகளின் காலாவதி காலம் ஒரு மாதத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசிகளை ஆராய்ந்த பின்னர் இவற்றின் காலாவதியாகும் காலம் ஒரு மாதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசிகள் எதிர்வரும் 31ம் திகதியுடன் காலாவதியாகும் நிலையில் காணப்பட்டதுடன் அவற்றின் காலாவதி காலம் ஜூலை மாதம் 1ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

கலாவதியாகும் தடுப்பூசிகளை வேகமாக ஏற்றும் முயற்சிகளில் சுகாதார தரப்பினர் ஈடுபட்டு வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

related posts