Home இலங்கை அஸ்ட்ரா சென்கா தடுப்பூசி கொள்வனவு குறித்து தீர்மானிக்கவில்லை – அரசாங்கம்

அஸ்ட்ரா சென்கா தடுப்பூசி கொள்வனவு குறித்து தீர்மானிக்கவில்லை – அரசாங்கம்

by Jey

Astrazeneca கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் தொகுதியினை நாட்டுக்கு கொண்டுவருவது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை என சுகாதார அமைச்சின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Astrazeneca கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசியை வழங்குவதற்காக 10 இலட்சம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இதுவரை கலந்துரையாடல் மட்டத்திலேயே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது

Astrazeneca தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட சுமார் 7 இலட்சம் பேருக்கு, இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்க வேண்டியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு கோடி 40 இலட்சம் சீன தயாரிப்பான Sinopharm தடுப்பூசிகளையும், 10 இலட்சம் Astrazeneca தடுப்பூசிகளையும் இறக்குமதி செய்யவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

இதற்காக 22 கோடி அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையிலேயே, Astrazeneca கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் தொகுதியை நாட்டுக்கு கொண்டுவருவது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை என சுகாதார அமைச்சின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

related posts