சீனாவின் தெற்கு மாகாணமான கங்சோ மாகாணத்தில் உள்ள முக்கிய நகரம் ஒன்று கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகத்துக்கு கொரோனா வைரஸை பரப்பிவிட்டு தற்போது சீனா படிப்படியாக அதிலிருந்து மீண்டு கொண்டிருக்கும் நிலையில் ஹாங்காங்கின் வடக்குப் பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த கங்சோ பகுதியில் வைரஸ் தாக்கம் அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்பகுதியில் 1.5 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த பகுதியில் வைரஸ் சோதனை மேற்கொண்டபோது 20 புதிய நோயாளிகளுக்கு வைரஸ் தாக்கியுள்ளது தெரியவந்துள்ளது. இவர்கள் அந்த மாகாணத்தின் சுகாதாரத் துறையால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த மாகாணத்தில் இருந்து மற்ற மாகாணங்களுக்கு வைரஸ் பரவாமல் தடுக்க சீன கம்யூனிச அரசு இந்த மாகாணத்தில் இருந்து வெளியேறும் அனைத்து வழிகளையும் மூடியுள்ளது.
சுகாதாரத் துறையின் பரிசோதனை முடியும்வரை இந்த மாகாணத்திலிருந்து குடிமக்கள் யாரும் வெளியே செல்ல அனுமதி இல்லை. இந்தியாவில் இருந்தோ அல்லது வேறு நாடுகளில் இருந்தோ யாராவது வந்து புதிய வகைப் வைரஸை பரப்பிச் சென்று உள்ளனரா என்று சீன அரசு சந்தேகிக்கிறது.
ஒரு நாளில் சராசரியாக 7 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. இப்பகுதியில் உள்ள முக்கிய மார்க்கெட்டுகள், வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. கொரோனா வைரஸை கடந்த 6 மாதமாக திறம்பட கையாண்டு வந்த சீனா, அரசு தற்போது இந்த புதிய வைரஸ் தாக்கத்தால் கவலை அடைந்துள்ளது.