ஒன்றாரியோ மாகாணத்தில் சில கொவிட் கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் நீடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாணங்களுக்கு இடையில் சுற்றுலா நோக்கில் மேற்கொள்ளப்படும் பயணங்கள் உள்ளிட்ட சில விடயங்களுக்கு தொடர்ந்தும் கட்டுப்பாடு விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள வீட்டிலேயே இருங்கள் உத்தரவு தொடர்ந்தும் நீடிக்காது என சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும், களியாட்ட நோக்கில் பொது இடங்களில் முகாம்களை அமைத்து ஒன்று கூறுதல் போன்ற நிகழ்வுகளுக்கான தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாணம் மூன்று கட்டங்களாக திறக்கப்பட உள்ளதாக முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.