Home இந்தியா கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு

by admin
2021ஆம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில்,
துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான “கல்பனா சாவ்லா விருது” ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால், சுதந்திரதின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருதில், ரூ.5 லட்சத்திற்கான காசோலை மற்றும் ஒரு பதக்கமும் அடங்கும். தமிழ்நாட்டைச் சேர்ந்த, துணிச்சலான மற்றும் வீர சாகசச் செயல் புரிந்த பெண் விண்ணப்பதாரர் மட்டுமே இவ்விருதினைப் பெறத் தகுதியுள்ளவர்.
2021-ஆம் ஆண்டு வழங்கப்படவுள்ள விருதிற்கான விண்ணப்பங்கள், விரிவான தன்விவரக் குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in/ என்ற இணைய தளம் மூலமாகவோ அரசுச் செயலாளர், பொதுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 அவர்களுக்கு 30.06.2021-க்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். விருதுபெறத் தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்படுவார் எனத் தெரிவித்துள்ளனர்.

related posts