காம்லூப்ஸ் படுகொலைகளுக்காக கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு ஒன்றாரியோ மாகாண முதல்வர் உள்ளிட்ட சிலர் பணிப்புரை விடுத்துள்ளனர்.
பிரிட்டிஸ் கொலம்பியாவின் இந்திய பாடசாலையொன்றின் சிறார்கள் படுகொலை செய்யப்பட்டு கூட்டு புதைகுழியில புதைக்கப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
றொரன்டோ பெரும்பாக பகுதியைச் சேர்ந்த நகரங்களின் மேயர்கள் இந்த பணிப்புரையை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த 200க்கும் மேற்பட்ட சிறார்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஒன்றாரியோ முதல்வர் டக் போர்ட், றொரன்டோவின் மேயர் ஜோன் டோரி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நகர கொடிகளை அரை கம்பத்தில் பறக்கவிடுமாறு கோரியுள்ளனர்.