காலியை அண்மித்த கடற்பரப்பில் கப்பலொன்றுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக கொண்டுசெல்லப்பட்ட 36 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் என்பன கடலில் வீழ்ந்துள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.
LIBRA II எனும் கப்பலில் ஏற்றுவதற்காக கொண்டுசெல்லப்பட்ட போது நேற்று (30) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க சில்வா தெரிவித்துள்ளார்.
இவற்றில் 22 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த துப்பாக்கிகள் காலியிலுள்ள ஆயுதக்களஞ்சியத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், படகில் கடற்படையின் பிரதிநிதியொருவரும் சென்றுள்ளார்.
இந்தத் துப்பாக்கிகள் கடற்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வௌிநாட்டு நிறுவனமொன்றுக்குச் சொந்தமானதென கடற்படைப் பேச்சாளர் கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் காலி துறைமுக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.