மும்பையில் அதிக வாகன போக்குவரத்து குறித்து மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று (திங்கள்கிழமை) கவலை தெரிவித்ததோடு, இதுபோன்ற நிலை தொடர்ந்தால் குடுதல் நடவடிக்கை எடுத்து போக்குவரத்து கட்டுப்படுத்தப்படும் என்றார்.
இந்நிலையில் பாந்த்ராவில் நடைபெற்ற இரண்டு மெட்ரோ ரயில் பாதைகளின் சோதனை ஓட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இதை தெரிவித்தார்.
கரோனா நோய்தொற்று எதிரான போருக்கு மத்தியில் இந்த திட்டங்கள் செயலுக்கு வந்தால் மும்பை இன்னும் மேன்மையடையும் என்றார். அரசு வரும் ஜூன் 15-ஆம் தேதி வரை தளர்வில்லாத ஊரடங்கை நீட்டித்துள்ளது, மேலும் கரோனா நோய்தொற்று மற்றும் ஆக்ஸிஜன் படுக்கைகள் கிடைப்பதைப் பொறுத்து தளர்வுகள் நீடிக்கப்படும் என்றார்.
இதனிடையில் தஹானுகர்வாடி மற்றும் ஆரே நிலையங்களுக்கு இடையில் உள்ள மெட்ரோ பாதையின் சோதனை ஓட்டத்தை முதல்வர் தாக்கரே இன்று (திங்கள்கிழமை) தொடங்கி வைத்தார். அக்டோபர் மாதத்திற்குள் வணிக ரீதியாக இந்த பாதை திறக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது.