Home உலகம் இந்தியாவுடன் உறவு ஏற்படுத்திக்கொள்ள முடியாது – இம்ரான்கான்

இந்தியாவுடன் உறவு ஏற்படுத்திக்கொள்ள முடியாது – இம்ரான்கான்

by Jey

இந்தியாவுடனான உறவை ஏற்படுத்திக் கொள்வது என்பது காஷ்மீர் மக்களுக்கு ஏற்படுத்தும் துரோகம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் குறிப்பிட்டுள்ளார். காஷ்மீர் தொடர்பிலான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை புறக்கணித்து விட்டு இந்தியா உடனான உறவை இயல்பாக்குவது காட்டிக் கொடுக்கும் செயல்பாடு என இம்ரான்கான் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற பொது மக்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாகிஸ்தானின் பொருளாதாரம் மேம்படுத்தப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லையெனவும், இந்திய நிர்வாகத்தின் கேஷ்மீர் தொடர்பான சட்டமூலங்கள் குறித்து கைவிடப்பட்ட பேச்சுவார்த்தைகள் மீள ஆரம்பிக்கப்பட வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

related posts