நாடு முழுவதிலும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும், எதிர்வரும் 7 ஆம் திகதி வரை முத்திரையிட (சீல் வைப்பதற்கு) மதுவரி திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் உடன் அமுலாகும் வகையில் முத்திரையிட(சீல் வைக்க) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் சிலர் மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருவதனை கட்டுப்படுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.