Home இந்தியா நாளைமுதல் தொடர்ந்து தடுப்பூசி போடப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நாளைமுதல் தொடர்ந்து தடுப்பூசி போடப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

by admin
தமிழகத்தில் நாளைமுதல் தொடர்ந்து தடுப்பூசி செலுத்தப்படும் என மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் கரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் நாளைமுதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை தடுப்பூசி போடுவதில் சிக்கல் உள்ளதாக இன்று காலை தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசுகையில்,
இன்று மாலை 5 மணிக்கு 4,20,570 டோஸ் தடுப்பூசிகள் சென்னை வரவுள்ளதால் நாளைமுதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசிகள் தொடர்ந்து போடப்படும். தடுப்பூசி வந்தவுடன் அனைத்து மாவட்டங்களுக்கும் உடனடியாக அனுப்பிவைக்கப்படும் எனத் தெரிவித்தார்.

related posts