றொரன்டோவில் இடம்பெற்ற விபத்துச் சம்பவமொன்றில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
றொரன்டோவின் டொன்வெலி பார்க்வே பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனி;ன்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் மற்றுமொரு நபர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகக் குறிப்பிடப்படுகின்றது.
இரண்டு மோட்டார் சைக்கிள்களும் அதி வேகமாக செலுத்தப்பட்டதாகவும் மோட்டார் போக்குவரத்து விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது என றொரன்டோ பொலிஸார் தெரிவிக்கி;ன்றனர்.