அமெரிக்க எல்லை அவசரமாக திறக்கப்படாது என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்க – கனடா எல்லைப் பகுதி மூடப்பட்டுள்ளது.
கனடாவில் அண்மைய நாட்களில் கொவிட்-19 நோய்த் தொற்று உறுதியாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகி வரும் நிலையில் அமெரிக்க எல்லையை திறக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரி வருகின்றனர்.
எனினும், அவசர அவசரமாக எல்லைப் பகுதியை திறப்பதற்கு எவ்வித உத்தேசமும் கிடையாது என பிரதமர் ட்ரூடே சுட்டிக்காட்டியுள்ளார்.
நோய்த் தொற்று பரவுகைகயை கட்டுப்படுத்துவதனை முன்னிலைப்படுத்தியே எல்லைகளை திறப்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.