இந்த மாதத்தில் சில வாரங்களுக்கு பாடசாலைகளை திறப்பதா இல்லையா என்பது குறித்து எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை திறந்து மாணவர்கள் நேரில் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மாகாண பிரதம மருத்துவ அதிகாரி டொக்டர் டேவிட் வில்லியம்ஸ் மற்றும் ஒன்றாரியோவின் கொவிட் குறித்த விஞ்ஞான குழு என்பன அனுமதி வழங்கியுள்ளனர்.
எவ்வாறெனினும் பாடசாலைகளை திறந்து மாணவர்களை கற்றலில் நேரடியாக பங்கேற்கச் செய்வது குறித்து சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்பதனால் பாடசாலைகள் திறப்பது காலம் தாழ்த்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலைகளை திறப்பது குறித்து போர்ட் மாகாணத்தின் மருத்துவ நிபுணர்கள் பலருக்கு கடிதம் ஊடுhக ஆலோசனை கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.