மக்களுக்கு இரண்டு வகையான தடுப்பூசிகளை வழங்குவது குறித்து கனடாவில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தடுப்பூசிகளை கலவை செய்து மக்களுக்கு ஏற்றுவது குறித்த அறிவுறுத்தல்களில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக முன்னணி செய்தி ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அஸ்ட்ராசென்கா, பைசர் அல்லது மொடர்னா தடுப்பூசிகளை கலந்து கொடுக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான தேசிய ஆலோசனை குழுவினால் இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
முதல் மருந்தளவாக ஒரு தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்கள் இரண்டாவது மருந்தளவாக சில பரிந்துரைக்கப்பட்ட மாற்று தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக முதல் மருந்தளவாக அஸ்ட்ராசென்கா தடுப்பூசி ஏற்றிக்கொண்ட ஒருவர் இரண்டாம் மருந்தளவாக பைசர் அல்லது மொடர்னா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.