இலங்கையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,527ஆக உயர்வடைந்துள்ளது.
கடந்த மே மாதம் சுமார் 780 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் 70000த்திற்கும் மேற்பட்டவர்கள் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.